LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் இனி அபராதம் 40 மடங்கு’ அதிகம்

வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகை அமைக்காவிட்டால் இனி ரூ.2000 அபராதம் விதிக்கும் வகையில் அரசாணை வெளியிட உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
***************************
வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும். அனைத்து பொது இடங்களிலும் பெயர் பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என பல ஆண்டுகளாகதமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
****************************
தமிழக அரசின் தொழிலாளர் நல ஆணையமும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை என்றால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் முழுமையாக செயல்படுத்தவில்லை.
********************************
தமிழில் பெயர் பலகை மாற்றாதவர்கள் மீது 
*****************************************
இந்நிலையில், தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, தமிழில் பெயர் பலகை வைக்காததற்காக ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. அபராத தொகையை உயர்த்தி வசூலிக்கும் திட்டம் அரசின் ஒப்புதலுக்காக உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
*************************************
இதனையடுத்து நீதிபதிகள், அபராதம் போதுமானதல்ல தீவிரமான நடவடிக்கையும் தேவைப்படுகிறது என்று உத்தரவிட்டனர். மேலும், அபராதத்தை உயர்த்தி வசூலிக்கவும், தொடர்ந்து தமிழில் பெயர் பலகை மாற்றாதவர்கள் மீது மீது தீவிர குற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
******************************************
ரூ.50 லிருந்து ரூ.2000 ஆக 
******************************
இந்நிலையில்  இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் இனி ரூ.2000 அபராதம் விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
*************************************************
தமிழில் பெயர்ப் பலகை வைக்காவிட்டால் ரூ.50 லிருந்து ரூ.2000 ஆக அபராத தொகையை உயர்த்த தமிழக அரசு விரைவில் அரசாணை பிறப்பிக்க இருப்பதாக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழில் பெயர் பலகை வைக்காத எத்தனை நிறுவனங்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
************************************.
தமிழ்நாடு அரசு அரசாணை
****************************************
தமிழில் தனியார் நிறுவனப் பெயர்கள் ஏற்கெனவே 29-07-1982 ம் ஆண்டு தமிழக அரசு தமிழில் பெயர் பலகை வைக்க அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு அரசு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசாணை எண் 1541, நாள் : 29.07.1982. கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும். பிற மொழிகளையும் பெயர்ப் பலகைகளில் பயன்படுத்த வேண்டியிருந்தால் முதலில் தமிழிலும் அதன்கீழ் சிறிய எழுத்தில் ஆங்கிலத்திலும் எழுத வேண்டும். இவை முறையே தமிழ். ஆங்கிலம், பிறமொழி என 5: 3: 2 ஆகிய அளவுகளில் இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் பயன்படுத்தும்போது, 5 : 3 என்ற அளவில், ஒரே பெயர்ப் பலகையில் அமைத்தல் வேண்டும். என தெரிவித்துள்ளது.
****************************************************
அதன்படி ஆங்கில சொற்களும் அதனை தொடர்ந்து அதற்கு இணையான தமிழ் பெயர்களை குறித்தும் பார்க்கலாம்.
*****************************************
டிரேடர்ஸ் - வணிக மையம்
ஸ்டோர்ஸ் - பண்டகசாலை
டிராவல்ஸ் - பயண ஏற்பாட்டகம்
ஸ்டுடியோ -ஒளிப்பட நிலையம்
பர்னிச்சர் மார்ட் - அறைகலன் அங்காடி
ஜெராக்ஸ் - நகலகம்
ஷோரும் - காட்சிக்கூடம்
நர்சிங் ஹோம் - நலம் பேணகம்
பார்சல் சர்வீஸ் -- சிப்பம் / கட்டுகை அனுப்பகம் |
எண்டர்பிரைசஸ் - தொழிற் முனையகம்
ஜெனரல் ஸ்டோர் -- பல்பொருள் அங்காடி
டெய்லர்ஸ் - தையலகம்
ஆட்டோமொபைல்ஸ் -- தானியங்கி உதிரிப்பொருட்கள்
விற்பனையகம் - 
பேட்டரி சர்வீஸ் - மின்கலன் சேவையகம்
கஃபே - அருந்தகம்
அக்ரோ சென்டர் - வேளாண்மை நடுவம்
கூல்டிரிங்க்ஸ் - குளிர்பான சுவைப்பகம்
பேக்கரி - அடுமனையகம்
டீ ஸ்டால் -தேநீரகம்
டிபன் கடை -- சிற்றுண்டியகம் 
ஓட்டல் - உணவகம்
ஷூ மார்ட் - காலணியகம்
ஜீவல்லரி - நகை மாளிகை
ரெடிமேடு - ஆயத்த ஆடையகம்
சில்க் ஸ்டோர் - துணியகம்
பிரிண்டர்ஸ் - அச்சகம்
ஓர்க்ஷாப் - பட்டறை
ஏஜென்சீஸ்- முகவாண்மை
லாட்ஜ்- தங்கும் விடுதி
பேன்சி ஸ்டோர்-  புதுமைப் பொருளகம்
எலக்ட்ரானிக்ஸ் - மின்னியல் வணிகம்
காம்ப்ளக்ஸ் - அடுக்ககம்
தியேட்டர் - திரையரங்கம்
டூ வீலர் ஓர்க்ஷாப் - இருசக்கர பழுதுநீக்கியகம்

வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப் பலகை அமைக்காவிட்டால் இனி ரூ.2000 அபராதம் விதிக்கும் வகையில் அரசாணை வெளியிட உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும். அனைத்து பொது இடங்களிலும் பெயர் பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என பல ஆண்டுகளாகதமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழக அரசின் தொழிலாளர் நல ஆணையமும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை என்றால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் முழுமையாக செயல்படுத்தவில்லை.

தமிழில் பெயர் பலகை மாற்றாதவர்கள் மீது 

இந்நிலையில், தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, தமிழில் பெயர் பலகை வைக்காததற்காக ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. அபராத தொகையை உயர்த்தி வசூலிக்கும் திட்டம் அரசின் ஒப்புதலுக்காக உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், அபராதம் போதுமானதல்ல தீவிரமான நடவடிக்கையும் தேவைப்படுகிறது என்று உத்தரவிட்டனர். மேலும், அபராதத்தை உயர்த்தி வசூலிக்கவும், தொடர்ந்து தமிழில் பெயர் பலகை மாற்றாதவர்கள் மீது மீது தீவிர குற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

ரூ.50 லிருந்து ரூ.2000 ஆக 

இந்நிலையில்  இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் இனி ரூ.2000 அபராதம் விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் பெயர்ப் பலகை வைக்காவிட்டால் ரூ.50 லிருந்து ரூ.2000 ஆக அபராத தொகையை உயர்த்த தமிழக அரசு விரைவில் அரசாணை பிறப்பிக்க இருப்பதாக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழில் பெயர் பலகை வைக்காத எத்தனை நிறுவனங்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அரசாணை

தமிழில் தனியார் நிறுவனப் பெயர்கள் ஏற்கெனவே 29-07-1982 ம் ஆண்டு தமிழக அரசு தமிழில் பெயர் பலகை வைக்க அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு அரசு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசாணை எண் 1541, நாள் : 29.07.1982. கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும். பிற மொழிகளையும் பெயர்ப் பலகைகளில் பயன்படுத்த வேண்டியிருந்தால் முதலில் தமிழிலும் அதன்கீழ் சிறிய எழுத்தில் ஆங்கிலத்திலும் எழுத வேண்டும். இவை முறையே தமிழ். ஆங்கிலம், பிறமொழி என 5: 3: 2 ஆகிய அளவுகளில் இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் பயன்படுத்தும்போது, 5 : 3 என்ற அளவில், ஒரே பெயர்ப் பலகையில் அமைத்தல் வேண்டும். என தெரிவித்துள்ளது.

அதன்படி ஆங்கில சொற்களும் அதனை தொடர்ந்து அதற்கு இணையான தமிழ் பெயர்களை குறித்தும் பார்க்கலாம்.

டிரேடர்ஸ் - வணிக மையம்

ஸ்டோர்ஸ் - பண்டகசாலை

டிராவல்ஸ் - பயண ஏற்பாட்டகம்

ஸ்டுடியோ - ஒளிப்பட நிலையம்

பர்னிச்சர் மார்ட் - அறைகலன் அங்காடி

ஜெராக்ஸ் - நகலகம்

ஷோரும் - காட்சிக்கூடம்

நர்சிங் ஹோம் - நலம் பேணகம்

பார்சல் சர்வீஸ் -- சிப்பம் / கட்டுகை அனுப்பகம்

எண்டர்பிரைசஸ் - தொழிற் முனையகம்

ஜெனரல் ஸ்டோர் -- பல்பொருள் அங்காடி

டெய்லர்ஸ் - தையலகம்

ஆட்டோமொபைல்ஸ் -- தானியங்கி உதிரிப்பொருட்கள் விற்பனையகம்

பேட்டரி சர்வீஸ் - மின்கலன் சேவையகம்

கஃபே - அருந்தகம்

அக்ரோ சென்டர் - வேளாண்மை நடுவம்

கூல்டிரிங்க்ஸ் - குளிர்பான சுவைப்பகம்

பேக்கரி - அடுமனையக

ம்டீ ஸ்டால் -தேநீரகம்

டிபன் கடை -- சிற்றுண்டியகம் 

ஓட்டல் - உணவகம்

ஷூ மார்ட் - காலணியகம்

ஜீவல்லரி - நகை மாளிகை

ரெடிமேடு - ஆயத்த ஆடையகம்

சில்க் ஸ்டோர் - துணியகம்

பிரிண்டர்ஸ் - அச்சகம்

ஓர்க்ஷாப் - பட்டறை

ஏஜென்சீஸ்- முகவாண்மை

லாட்ஜ்- தங்கும் விடுதி

பேன்சி ஸ்டோர்புதுமைப் பொருளகம்

எலக்ட்ரானிக்ஸ் - மின்னியல் வணிகம்

காம்ப்ளக்ஸ் - அடுக்ககம்

தியேட்டர் - திரையரங்கம்

டூ வீலர் ஓர்க்ஷாப் - இருசக்கர பழுது நீக்கியகம்

by Kumar   on 07 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.